ETV Bharat / state

'முக்கியக் குற்றவாளிகள் விடுதலை; சங்கரின் படுகொலைக்குப் பரிசளிப்பா?' - கிருஷ்ணசாமி

சென்னை: பட்டப்பகலில் நடத்தப்பட்ட சங்கரின் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றத்தின் பரிசளிப்பா என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

Puthiya Tamilagam party presient Krishnasamy

author img

By

Published : Jun 23, 2020, 4:12 PM IST

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கைதான கௌசல்யாவின் அப்பா உள்பட மூன்று பேரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும் ஐந்து பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றனர்.

இச்சூழலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு காலத்தில் சிசுக் கொலைகளை நியாயப்படுத்திய கும்பல் இனிமேல் ஆணவக் கொலைகளை நியாயப்படுத்திப் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கண்ணெதிரே நடந்த சங்கர் கொலை நடந்தது.

ஆனால் தற்போது கொலைக் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சங்கர் கொலை செய்யப்பட்ட சமயத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தது. இதுபோன்ற குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும்?

மனித உரிமைக்காகப் போராடியவர்களுக்கும், மனிதநேயத்துடன் நடந்துகொள்ளக் கூடியவர்களுக்கும் எதிராக அரசாங்கமும் நீதிமன்றமும் ஒன்றாக நிற்கும்போது எப்படி நீதி கிடைக்க முடியும்? பட்டப்பகலில் நடத்தப்பட்ட படுகொலைக்கு இது பரிசளிப்பா?

இந்த வழக்கை உள்நோக்கத்தோடு நடத்தி, தவறான தீர்ப்பு வழங்கக் காரணமாக இருந்த அதிமுக அரசைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக அனைத்து மாவட்டங்கள், ஒன்றியங்கள் அளவில் இம்மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை: பின்னணி இதுதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.