எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.
இவர்களுக்கு மே 3ஆம் தேதி நடக்க வேண்டிய நீட் நுழைவுத்தேர்வு கரோனா காரணமாக ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வினை எழுதுவதற்கு 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மகாராஷ்டிராவிலிருந்து இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 829 மாணவர்களும், உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 705 மாணவர்களும், ராஜஸ்தானிலிருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 மாணவர்களும், கர்நாடகவிலிருந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 629 மாணவர்களும், தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 மாணவர்களும், கேரளாவிலிருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 10 மாணவர்களும் என 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. தலைநகர் டெல்லியிலும் அதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது.
மேலும் வரக்கூடிய மாதங்களில் தொற்று எண்ணிக்கை உச்சத்திற்குச் செல்லலாம் என்றும், அக்டோபர் வரை கரோனாவின் தாக்கம் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வு மீண்டும் தள்ளிவைக்க வாய்ப்பு - சென்னை செய்திகள்
சென்னை: மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.