வங்கக் கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பகல் ஒரு மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் ரத்துசெய்யப்பட்டது.
அதைப்போல் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் 12.20 மணி,பகல் 3.20 மணிக்கு வரவேண்டிய விமானங்கள் வழக்கம்போல் வந்தன.
ஆனால் மாலை 4.50 மணிக்கு வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.அதோடு சென்னையில்இருந்து பகல் 11.30 மணிக்கு கொச்சி செல்லும் விமானமும், பிற்பகல் 2.35 மணிக்கு கொச்சியிலிருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டன.
நாளைய தினம் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்கள்,அப்போதைய சூழ்நிலைக்கு தக்கதாக முடிவு செய்யப்படும் என்று சென்னை விமானநிலைய அலுவலர்கள் கூறுகின்றனா்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 8.35 மணி, காலை 11.15 மணி, பகல் ஒரு மணி ஆகிய நேரங்களில் 3 விமானங்கள் தூத்துக்குடிக்கு இயக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: புரெவி புயல்: திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்து நிறுத்தம்