ETV Bharat / state

வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த மூவர் கைது...! - திருமங்கலம்

சென்னை: வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் மூவரை, திருமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

youth
author img

By

Published : Aug 7, 2019, 1:02 PM IST

சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆனந்தகுமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கார் மாயமானதாக, திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர், காரை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிற்க சொல்லியும், அது நிற்காமல் சென்றது. பின்னர், அந்த காரை துரத்திச் சென்று பிடித்த காவல் துறையினர், அதில் இருந்த மூன்று நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கிறில்ராஜ்(22), பாலாஜி(21), மணிகண்டன்(22) என்பதும் அந்த கார் புகார் அளித்த ஆனந்தகுமாருடையது என்பதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

மேலும் இந்த கும்பல் பாண்டிபஜார், செம்மஞ்சேரி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மொத்தம் ஆறு இருசக்கர வாகனங்களையும் திருடியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

திருட்டு வாகனத்தில் இளைஞர்கள்
திருட்டு வாகனத்தில் இளைஞர்கள்

இதையடுத்து, ஆறு இருசக்கர வாகனம் மற்றும் காரை பறிமுதல் செய்த திருமங்கலம் காவல் துறையினர், அந்த கும்பலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:சென்னை திருமங்கலத்தில் வாகன சோதனையில் 3 பேர் கைது.ஒரு கார் , 6 பைக் பறிமுதல்.

சென்னை திருமங்கலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேனேஜர் ஆனந்தகுமார்(45) இவர் அலுவலக வாசலில் நிறுத்தி வைத்து இருந்த கார் காணவில்லை என்று கடந்த 19:7:19 அன்று திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் உடன் 6 காவலர்கள் திருமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும்போது இந்த வழியாக காரில் வந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். அந்த கார் நிற்காமல் சென்றதால் பின்சென்ற போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்பு விசாரணையில் திருமங்கலம் பகுதியில் கார் திருடியது ஒப்புக்கொண்டனர். மேலும் விசாரணையில் மேலக்கோட்டை மாவட்டம் சேர்ந்த சிறில்ராஜ்(22) , பாலாஜி(21) , மணிகண்டன் (22) ஆகியோர் பாண்டிபஜார் பகுதியில் 2 பைக் , செம்மஞ்சேரி பகுதியில் 2 பைக் , காஞ்சிபுரம் பகுதியில் 2 பைக் திருடியது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது பாண்டி பஜார் , செம்மஞ்சேரி , காஞ்சிபுரம் , பொன்ற காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களிடம் இருந்து ஒரு கார் , 6 பைக் பறிமுதல் செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.