ETV Bharat / state

'புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல் நடந்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம்'

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல் நடந்திருந்தால் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pudhucherry New year celebration
Pudhucherry New year celebration
author img

By

Published : Jan 4, 2022, 6:23 PM IST

சென்னை: உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கக் கோரி கரிக்காலம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், புதுச்சேரி தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பாளர் சி. ஸ்ரீதர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த டிசம்பர் 29ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அமர்வு, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரையிலான மூன்று மணி நேரத்துக்கு மாநிலத்தில் மதுபானங்கள் விற்கக் கூடாது. மதுபான விற்பனை கடைகள் மட்டுமல்லாமல் பார்களிலுள்ள ஓட்டல்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க கூடாது. அலுவலர்கள், காவல் துறையினர் தடுப்பூசி சான்று கேட்டால் பொதுமக்கள் சான்றிதழைக் காட்ட வேண்டும். பிரபலங்கள் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள கூடாது. பொதுமக்களின் நலனை புதுச்சேரி அரசு உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 4) மீண்டும் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரைச் சாலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்திருந்தனர். புதுச்சேரி அரசு கொடுத்த உத்தரவாதம் மீறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள், பத்திரிகை செய்திகள், படங்கள் உள்ளன.

வழக்கு நடைபெற்ற நாளில் புதுச்சேரியில் இரண்டு பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு இருந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஏழு பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதிட்டனர்.

வழக்கை விசரித்த நீதிபதிகள், புத்தாண்டு நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. புத்தாண்டு நாளில் விதிமீறல் நடந்திருந்தால் மனுதாரர்கள் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்று கூறி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அபராதம் விதித்ததால் ஆத்திரம்: காவல் ஆய்வாளரை கொல்ல முயன்றவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.