ETV Bharat / state

2023ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு – கால அட்டவணை வெளியீடு

2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை வெளியீடு

author img

By

Published : Dec 16, 2022, 6:51 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான கால அட்டவணையில், 11 பணியிடங்களுக்கு புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 12 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் குரூப் 4 பணியிடங்களில் ஆட்கள் சேருவதற்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும், பிப்ரவரி 2024 ஆம் ஆண்டில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஜூலை 2024 கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பொறியியல் சேவைப் பணிகளில் 828 காலி பணியிடங்களும், முருக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களில் 762 இடங்களும், சுற்றுலா துறையில் உதவி அலுவலர் பணி நிலை 2-ல் 17 பணியிடங்களும், உதவி புவியியலாளர் பணியிடங்களில் 19 இடங்களும், விளையாட்டு இயக்குனர் பணியில் 12 இடங்களும், தமிழ்நாடு கால்நடை சேவை துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தில் ஐந்து இடங்களும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் சேவை 101 இடங்களும் என 11 பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ள பணியிடங்கள் நிறுவுவதற்கான தேர்வு மற்றும் கலந்தாய்வுகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் 2 பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.