சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு அருகில் நிலை கொண்டிந்ருதது. இதனால் சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் மரங்களும் சாலையில் விழுந்தன.
இந்நிலையில், புயல் கரையைக் கடக்கத் துவங்கி உள்ளதால் சென்னையில் மழை ஓய்ந்தது. மழை நின்ற நிலையில், சென்னையில் பல இடங்களிலும் தேங்கி நின்ற மழை நீர் வடியத் துவங்கியது. மேலும், தடை செய்யப்பட்டு இருந்த மின் விநியோகமும் ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023) இன்றும் (5.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை (6.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: குறைந்து வரும் மிக்ஜாம் தாக்கம்.. அடுத்த 5 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?