ETV Bharat / state

மும்மொழிக் கொள்கையை வரவேற்கும் கிருஷ்ணசாமி!

சென்னை: மும்மொழிக் கொள்கையை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி
author img

By

Published : Jun 4, 2019, 11:14 PM IST

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிருஷ்ணசாமி, "கஸ்தூரி ரங்கன் குழு தயார் செய்துள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தி படிக்க வேண்டும் என்று மும்மொழி கொள்கை சொல்லப்பட்டிருந்தது. பின்பு இந்தி என்பது திருத்தப்பட்டு ஏதாவது ஒரு மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி மும்மொழி கல்வியை வரவேற்கிறது. 1990 ஆண்டுக்கு பின் உலகமயமாதல், தனியார்மையப்படுத்துதல் போன்றவற்றின் காரணத்தால் நாம் வேறு மொழியை கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியை திணிக்காமல் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்து படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.

கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிருஷ்ணசாமி, "கஸ்தூரி ரங்கன் குழு தயார் செய்துள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தி படிக்க வேண்டும் என்று மும்மொழி கொள்கை சொல்லப்பட்டிருந்தது. பின்பு இந்தி என்பது திருத்தப்பட்டு ஏதாவது ஒரு மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி மும்மொழி கல்வியை வரவேற்கிறது. 1990 ஆண்டுக்கு பின் உலகமயமாதல், தனியார்மையப்படுத்துதல் போன்றவற்றின் காரணத்தால் நாம் வேறு மொழியை கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியை திணிக்காமல் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்து படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.

கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவர்.கிருஷ்ணசாமி, "தேசிய கல்வி கொள்கையில் கஸ்தூரி ரங்கன் குழு தயார் செய்துள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் இந்தி படிக்க வேண்டும் என்று மும்மொழி கொள்கை சொல்லப்பட்டிருந்தது. பின்பு இந்தி என்பது திருத்தப்பட்டு ஏதாவது ஒரு மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி மும்மொழி கல்வியை வரவேற்கிறது. 1990 ஆண்டுக்கு பின் உலகமயமாதல், தனியார்மையப்படுத்துதல் போன்றவற்றின் காரணத்தால் நாம் வேறு மொழியை கற்க வேண்டிய சூழல் ஏற்படௌடுள்ளது.

தற்போது இந்தியை திணிக்காமல் விருப்பப்ட்டு தேர்ந்தெடுக்கும் சூழல் அமைந்துள்ளது. இதனை தமிழக மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய பழமையான மொழியாகும். அமெரிக்காவில் வாழும் தமிழ் குடும்பங்கள் யாரும் தமிழ் பண்பாட்டை மறக்கவில்லை.

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ மற்றும் சர்வதேச பாடத்திட்டத்தில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே தற்போதுள்ள வாய்ப்பை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெரும் தமிழர்கள் வெளிமாநிலங்களில் பணியாற்றும் போது இந்தி தெரியாமல் சிரமப்பட்டு பின் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள்.

இந்த மும்மொழி கொள்கை மூலம் பிற மாநிலங்களில் தமிழ் கற்கும் சூழலும் ஏற்படும். எனவே 'We want Hindi' என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் மும்மொழிக் கல்வியின் அவசித்தை குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்த உள்ளேன்.

அனைத்து கட்சிகளின் எதிர்பை தாண்டி மத்திய அரசு இந்த மும்மொழி கொள்கையை செயல்படுத்த வேண்டும்.

தி.மு.க. , அ.தி.மு.க. மட்டும் தான் 8 கோடி தமிழக மக்களின் வாழ்வியலை தீர்மானிக்க வேண்டுமா?. இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 50 வயதில் ஒருவர் இந்தி கற்றுக் கொள்வதை 10 வயதில் கற்றுக் கொடுங்கள்.

இந்தியாவில் மும்மொழி கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் போது தமிழகம் மட்டும் ஏன் ஏற்கவில்லை. 
கிராமப்புற, பழங்குடி, சிறுபான்மை மக்கள் பயில்கின்ற அரசு பள்ளிகளில் மட்டும் ஏன் இந்த மும்மொழி கொள்கையை அனுமதிப்பதில்லை. வசதி படைத்தவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் தான் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டுமா. இந்த பாகுபாடு ஏன். இதுதான் என்னுடை கேள்வி.

இதனால் மாணவர்கள் இன்னொரு மொழியை கூடுதலாக கற்றுக் கொள்வார்கள். இதன்மூலம் நாம் வடஇந்தியாவில் தொழில் தொடங்கலாம்.

தற்போது கேரளம், கர்நாடகதில் இந்தியை படிக்கிறார்கள். அவர்கள் இந்தி படிப்பதால் அவர்கள் பண்பாட்டை இழந்துவிட்டார்களா.

இந்தி மட்டுமில்லாமல் பிரெஞ்ச், ஜப்பானிய மொழி என்று எந்த மொழி வேண்டுமானாலும் மாணவர்கள் பயிலட்டுமே. ஆன்லைன் மூலம் இதை எல்லாம் நடைமுறை படுத்தலாம்.

கடந்த செய்தியாளர் சந்திப்பில் நடைபெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் கொரட்டூரில் என்மீது புகார் கொடுத்ததால் தான் எங்கள் தரப்பிலிருரேர்து செய்தியாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் நடப்பதை பெரிய பொருட்டாக எடுக்க கூடாது. நான் இன்று தான் ஊரிலிருந்து வந்தேன். புகாரில் என்ன கொடுத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது. அது என்ன என்பதை விசாரித்து பிறகு நான் பதில் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் மீது அளித்த புகாரை புகாரை திரும்ப பெறுவீர்களா என்ற கேள்விக்கு 

கொரட்டூரில் செய்தியாளர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க சொல்லுங்கள் என்று கட்சியை சேர்ந்த ஒருவர் ஆவேசத்துடன் கூறியதால் இந்த செய்தியாளர் கூட்டத்திலும் வாக்குவாதம் முற்றியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.