பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 26 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர், அதனையொட்டிய பணி நிலையில் பதவிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களில் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அலுவலராக 26 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மாவட்ட கல்வி அலுவலராக ராசுசேகரன், கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பராசக்தி, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலராக கோபால கிருஷ்ணா ராவ், கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் மாவட்டக் கல்வி அலுவலராக சிவானந்தன், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலராக சுப்பாராவ், மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலராக குமார், மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலராக ஜெகநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பாபு விநாயகம் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
அதேபோல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உதவி இயக்குநர் பணியிடத்தில் செல்வ கணேசன், ஆத்தூர் மாவட்டக் கல்வி அலுவலராக ஆரோக்கியசாமி, சத்தியமங்கலம் மாவட்ட கல்வி அலுவலராக அன்பழகன், மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலராக சுகானந்தம், தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலராக ராஜகோபால், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலராக ஜான் பாக்கியசெல்வம், திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலராக ஆனந்தன், திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலராக சாந்தி, உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலராக கணேசன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலராக உதயகுமார், ஓசூர் மாவட்டக் கல்வி அலுவலராக ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலராக புண்ணியகோட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலராக ரமேஷ், குன்னூர் மாவட்ட கல்வி அலுவலராக சுவாமி முத்தழகன், சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலராக திருமுருகன், தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக கோகிலா, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலராக கண்ணிச்சாமி, செஞ்சி மாவட்ட கல்வி அலுவலராக அமுதா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்தப் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் முற்றிலும் தற்காலிகமானது. தலைமையாசிரியர்கள் தங்களின் பணியிட பொறுப்புகளை அந்தப் பள்ளியின் மூத்த உதவி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியில் சேர வேண்டும்.
தலைமையாசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளில் விதி 17 (பி)இன் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதையும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பதையும், அவர் தண்டனைக் காலத்தில் உள்ளார் என்பதையும் சரிபார்த்த பின்னர் பணி விடுவிக்க வேண்டும் என அதில் உத்தரவிட்டுள்ளார்.