ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை - etv bharat

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை

author img

By

Published : Aug 19, 2021, 4:11 PM IST

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய அனுமதிகளையும் ஒப்புதலையும் பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஆனால், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, அதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர் தரப்பில், சுற்றுச்சூழல் மற்றும் நகரமைப்பு திட்ட இயக்குநர் அனுமதி பெற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருப்பதால் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை

இதையடுத்து, கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டலாமா? கூடாதா? என முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளதாக கூறிய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பிணை கோரிய மீரா மிதுனின் வழக்கு தள்ளிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.