ETV Bharat / state

செக் மோசடி வழக்கில் 'கோச்சடையான்' பட தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு சிறை!

author img

By

Published : Aug 9, 2023, 8:01 AM IST

காசோலை மோசடி வழக்கில் 'கோச்சடையான்' படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

producer murali manohar 6 month jail sentence
தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு சிறை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு, ரூ.10 கோடியை அபிர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் திரைப்பட உரிமையை வேறு யாருக்கேனும் கைமாறும் பட்சத்தில், அந்த தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அபிருக்கு கொடுக்க வேண்டிய தொகை 5 கோடி ரூபாய்க்கு கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி முரளி மனோகர் வழங்கியுள்ளார். ஆனால் அவர் வழங்கிய காசோலை, அவரது வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிவந்துள்ளது.

அதனால் காசோலை மோசடி தொடர்பாக முரளி மனோகருக்கு எதிராக அபிர் சந்த் நாகர் மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான வழக்கை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மேலும், 5 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 7 கோடியே 70 லட்சம் ரூபாயை அபிர் சந்த் நாகருக்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் தரப்பில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தஸ்னீம், கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம் அல்லிகுளம் நீதிமன்றம் நிர்ணயித்த தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.