ETV Bharat / state

வெல்டன் அண்ணாத்த - ரஜினிக்கு தயாரிப்பாளர் குஞ்சுமோன் நன்றி! - அரசியலுக்கு முழுக்கு

அரசியலுக்கு முழுக்கு, மக்கள் மன்றம் கலைப்பு என்ற ரஜினியின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருவதாக தயாரிப்பாளர் கேடி. குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு தயாரிப்பாளர் குஞ்சுமோன் நன்றி
ரஜினிக்கு தயாரிப்பாளர் குஞ்சுமோன் நன்றி
author img

By

Published : Jul 15, 2021, 9:36 AM IST

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஜூலை 12 ஆம் தேதி சென்னையில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வருவார் என மிகுந்த எதிர்பார்புடன் இருந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்கள் மன்றத்தைக் கலைத்து, மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றி அறிவித்தார். அதோடு வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் மன்றம் கலைப்பு, அரசியலுக்கு முழுக்கு என ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த அறிவிப்பு உலகமெங்கும் வாழும் அவரது ரசிகர்களை மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம்".

வருடத்திற்கு இரண்டு படங்கள்

"சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, வருடத்திற்கு இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள். சினிமா செழிக்கும், வியாபாரம் சிறக்கும்.அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது".

ரஜினி ஒரு பொக்கிஷம்

"ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன்".

"என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும், ரஜினியின் படங்களால் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்".

சினிமாவின் சிகரம்

"பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள். வெல்டன் அண்ணாத்த.! " என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியலுக்கு நோ சொன்ன ரஜினி: மக்கள் மன்றம் கலைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.