ETV Bharat / state

முதல் ஆளாக நின்று எதிர்ப்பேன் - பாரதிராஜா எச்சரிக்கை! - பாரதிராஜா எச்சரிக்கை

சென்னை: சங்க உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், இயக்குனருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Bharathiraja Statement About Producer Council  Bharathiraja Statement  Bharathiraja Latest  பாரதிராஜா  பாரதிராஜா அறிக்கை  பாரதிராஜா எச்சரிக்கை  பாரதிராஜா தற்போதைய செய்திகள்
Bharathiraja Statement
author img

By

Published : Mar 9, 2021, 12:54 PM IST

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது துரதிஷ்டமானது. மற்ற மாநிலங்களில் இதுபோல் கிடையாது.

அதற்குக் காரணம் தலைமை பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நம்புகிறேன். பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து, கொள்கைகளை கட்டமைத்துக்கொள்ள வேண்டும், அல்லது மற்ற சங்கங்களுடன் இணைந்து செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்.

இதை விடுத்து மற்ற சங்கங்களையும், அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, திரைத்துறையையே நிர்மூலமாக்கிவிடும். இதற்கு சான்றாக டிஎப்பிசி (TFPC) புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது.முந்தைய டிஎப்பிசி நிர்வாகம் இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து, தயாரிப்பாளர்களுக்கு சேவையாற்றி வந்துள்ளது, இதனை புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும்.

டிஎப்ஏபிஏ TFAPA-ல் உள்ள உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் இந்த 3 சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினருக்கு சேவையாற்றுதே சங்கங்களின் பணி, இதனை டிஎப்பிசி (TFPC) உணர வேண்டும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு டிஎப்பிசி என்றுமே ஒரு தாய்ச்சங்கமாகும்.

Bharathiraja Statement About Producer Council  Bharathiraja Statement  Bharathiraja Latest  பாரதிராஜா  பாரதிராஜா அறிக்கை  பாரதிராஜா எச்சரிக்கை  பாரதிராஜா தற்போதைய செய்திகள்
பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை

சமீபத்தில் டிஎப்ஏபிஏ உறுப்பினர்களை தனித்தனியாக அழைத்து மிரட்டியும், அவர்களின் படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முற்படுவதையும் அறிந்தேன். அவ்வாறு, நடந்தால், டிபிஎப்சி பல கூறுகளாக உடையும். இதற்கு காரணமாக புதிய நிர்வாகம் இருக்கும். உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், முதல் ஆளாக நின்று எதிர்ப்பேன் என்பதையும் எச்சரிக்கையாக இங்கே பதிவு செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 100% இருக்கைகளுக்கு அனுமதி... முதலமைச்சருக்கு நன்றி: பாரதிராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.