ETV Bharat / state

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முதல்முறையாக புகுத்தப்படும் தனியார்மயம்...!

author img

By

Published : Oct 7, 2020, 8:09 PM IST

Updated : Oct 12, 2020, 11:29 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் உள்ள 3 துணை மின் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு கொடுக்கப்படவுள்ள சம்பவம், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

privatization-for-the-first-time-in-tamil-nadu-electricity-board

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், புதிதாக நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிப்பு மற்றும் இயக்கப் பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே பணியில் உள்ள பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு பறிக்கப்படுவதுடன், பொறியியல் படிப்பை படித்து முடித்து வேலை கிடைக்கும் என நம்பியிருக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பும் பறிக்கபோகும் நிலை உருவாகியுள்ளது.

தனியார் நிறுவனம் பராமரித்தாலும், புதிதாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என காரணங்கள் கூறலாம். அரசு நிறுவனத்தில் பணி புரிவதில் உள்ள பலன்கள் முழுமையாக "காண்ட்ராக்ட்" எடுக்கும் நிறுவனத்தால் அளிக்கப்படுமா? என்பது என்றும் கேள்விக்குறி தான். இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிதாக அமைக்கப்பட்ட 3 துணை மின் நிலையங்களை தனியார் நிறுவனங்களின் மூலம் பராமரிக்க வாரியத் தலைவரின் உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முதல்முறையாக புகுத்தப்படும் தனியார்மயம்

கடந்த 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம், அனல், நீர், காற்று ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் மூலமும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.

மின்சார உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சாரம் துணை மின் நிலையங்களுக்கு மின் கடத்திகள் மூலம் கொண்டு வரப்படும். பின்னர் அங்கிருந்து மின் மாற்றிகள் மூலம் கட்டுப்பாட்டுடன் தொழிற்சாலைகள், விவசாய நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மின் விநியோகத்தில் துணை மின் நிலையங்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்து 650 துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை மின் நிலையங்களில் சிறிது பழுது ஏற்பட்டாலும் மின் வினியோகம் செய்வதில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே இந்தப் பணியை மேற்கொள்வதற்காக மேற்பார்வை செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் , மின் பணியாளர்கள் என 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிக்காக, 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். துணை மின் நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் பணிபுரியும் மின்சார பணியாளர்களும், பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, விரைவாக பணிகளை மேற்கொள்வர்.

இதன் காரணமாக, எவ்வித தடையுமின்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும்போது, அவற்றை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிதாக அமைக்கப்பட்ட 3 துணை மின் நிலையங்களை தனியார் நிறுவனங்களின் மூலம் பராமரிக்க வாரியத் தலைவரின் உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விழுப்புரம் மின்பகிர்மான கோட்டத்திற்குட்பட்ட சங்கராபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 230/110 கேவி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கு குத்தகைக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக, 93 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தலைமை பொறியாளர் (இயக்கம்) இதற்கான கடிதத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி விழுப்புரம் மின் பகிர்மான கோட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பியுள்ளார். அதேபோல் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட230/110 கேவி துணை மின் நிலைய பராமரிக்க இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு, 93 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் ஒப்பந்தம் விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய கடிதத்தை தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் இயக்குநர் ஆகஸ்ட் 28ஆம் தேதி மதுரை மின் கோட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு புதிதாக 230/110 கேவி துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை எல் அண்டு டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தலைமை அலுவலகத்திற்குள் இருக்கும் துணை மின் நிலையத்தைத் தனியாருக்கு அரசு தாரை வார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் தலைமைப் பொறியாளர் (இயக்கம்) சென்னை மேற்கு கோட்ட மேற்பார்வை பொறியாளருக்கு செப். 21ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்படும் 230/33 கேவி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு 91 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையங்கள் குத்தகை அனைத்தும் டெண்டர் விடப்பட்டு, விதிகளின்படி பராமரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மின் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லாமல் பராமரிக்க நிறுவனத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விதிகளின்படியே டெண்டர்கள் விட வேண்டும். அதன் பின்னர் இறுதி செய்து குறிப்பிட்ட நேரத்தைத் தேர்வு செய்ய கால நிர்ணயம் உள்ளது.

எனவே, தற்போது 3 துணை மின் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான டெண்டர்கள் மட்டுமே விடப்பட்டுள்ளன. அதில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என, தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த நடைமுறைக்கு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐை தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் எதிர்த்து உள்ள நிலையில், துணை மின் நிலையங்களை குத்தகைக்கு விடுவது மறைமுகமாக ஆதரவளிக்கும் நடவடிக்கை.

இது மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. எனவே அரசு இந்த முடிவினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

மின் வாரியத்தில் முதல்முறையாக புகுத்தப்படும் தனியார்மயம்!

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் கூறுகையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 3 துணை மின் நிலையங்களை தனியாருக்கு இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தைத் தமிழ் நாட்டில் மறைமுகமாக அமல்படுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.

துணை மின் நிலையங்களில் ஏற்படக்கூடிய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. 150 கோடி மதிப்புள்ள துணை மின் நிலையத்தைத் தனியாரிடம் இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கு 99 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விடுகிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெளியிட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு மின்வாரியத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தனியார் பணி செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. அதனை மீறி அரசிற்கு தெரியாமல் தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண்மை இயக்குநர், இது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் 23 துணை மின் நிலையங்களை தனியார் பராமரிப்பதற்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு உள்ளது. இந்த நடவடிக்கையை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், அனைத்து சங்கங்களையும் அழைத்து போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

இதையும் படிங்க: பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

Last Updated : Oct 12, 2020, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.