இதுதொடர்பாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுகம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், எங்களின் சங்கத்தில் சுமார் 6000 தனியார் சுயநிதி நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒன்பது மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அப்போது முதல் பிரைமரி பள்ளி மாணவர்கள் விடுமுறையிலேயே உள்ளனர்.
ஆன்லைன் வகுப்பு கூட நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்பு நடத்தினாலும் 10 சதவீதம் மாணவர்கள் கூட அந்த வகுப்புகளை கவனிப்பதில்லை. ஆன்ட்ராய்டு செல்போன் 20 சதவீத பெற்றோரிடம் கூட இல்லை. பாடங்களை வீடியோவாக வாட்ஸ்அப்பில் அனுப்பினாலும் 15 சதவீதம் மாணவர்கள் கூட பார்ப்பதில்லை.
ஆகவே நர்சரி, பிரைமரி பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 3 முதல் 10 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு வரும் ஜனவரி முதல் பள்ளிகளைத் திறந்து வகுப்புக்களை நடத்த வேண்டியது மிக மிக அவசியமாகும்.
தடுப்பு ஊசிகள் தயாரானவுடன் 10 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு கோவிட் 19 தடுப்பு ஊசியை முதல் சுற்றிலேயே செலுத்த வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போடப்பட்ட பிள்ளைகளை பள்ளிக்கு செல்ல அனுமதித்து, பள்ளிகளைத் திறக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி!