ETV Bharat / state

பட்டியல் இன மக்களுக்கு தனி வாகுச்சாவடி அமைக்கக் கோரிய மனு - தள்ளுபடி செய்த நீதிமன்றம்! - thuthookudi district news

சென்னை : தூத்துக்குடி தெற்கூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்களுக்காக கருங்குளம் ஆரம்ப பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Private polling booth of scheduled cast, request dismissed

author img

By

Published : Mar 18, 2021, 7:07 PM IST

தூத்துக்குடி மாவட்டம், தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், தங்கள் கிராமத்தில் 250 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் இரண்டு வாக்குசாவடிகள் அமைக்கப்படும். அதில் பட்டியலின மக்கள் வாக்களிக்க செல்லும்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

கடந்த 2001, 2006, 2011, 2019ஆம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கருங்குளம் பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் தனி வாக்குச்சாவடியை அமைப்பதில்லை என்பதால், உள்ளாட்சித் தேர்தலைபோல, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் கருங்குளம் ஆரம்பப் பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரிய மனுவை பரிசீலித்து தனி வாக்குச்சாவடி அமைக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தமையிலான அமர்வு, தனி வாக்குச்சாவடி அமைக்க உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

செந்தில் பாலாஜி பேச்சு, திமுகவுக்கு ஜெயக்குமார் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.