ETV Bharat / state

தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம்; கண்காணிக்க தனிக்குழு - ராதாகிருஷ்ணன்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வும், அதனை கண்காணிக்க தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

னகன
ளனக
author img

By

Published : Feb 15, 2022, 2:09 PM IST

Updated : Feb 15, 2022, 2:58 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று (பிப். 14) தொடங்கப்பட்டது.

இதனிடையே, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு இன்று (பிப்.15) சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்புக்கான கையேட்டை வழங்கி, சென்னை மருத்துவக் கல்லூரியின் பெருமைகளை எடுத்துக் கூறினார்.

கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 6658 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் கண்காணிக்க தனிக்குழு ராதாகிருஷ்ணன்

அதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் வரும் 21ஆம் தேதி வரை சேர்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் மாணவர்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான வங்கிகள் திறப்பு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த அலை?

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் படுக்கைகளில் 2690 கரோனா நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைவாக உள்ளது. எனவே பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது.

பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அடுத்த அலை வருவதைத் தடுக்கலாம். அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பொது இடங்களில் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு

கண்காணிப்பு மையங்கள்

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 13 லட்சம் மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. தடுப்பூசி எடுக்காதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா 3-ஆவது அலையில் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தி இருந்ததால் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவாக இருந்தது.

மேலும் ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸ் இரண்டு பாதிப்பு இருந்தாலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சையும் அதிகளவில் தேவைப்படவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம்; கண்காணிக்க தனிக்குழு - ராதாகிருஷ்ணன்
தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம்; கண்காணிக்க தனிக்குழு - ராதாகிருஷ்ணன்

நோய் தொற்று எண்ணிக்கை குறையும் பொழுது கரோனா கண்காணிப்பு மையங்கள் அடுத்த 15 நாட்களில் ஆய்வு செய்து தேவைக்கேற்ப படிப்படியாகக் குறைக்கப்படும். மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் கட்டணம் கூடாது

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இதனைக் கண்காணிக்கத் தனிக் குழுக்கள் உள்ளன. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க தனியாக எண்கள் அறிவிக்கப்படும். அதில் மாணவர்களும் பெற்றோர்களும் புகார் தெரிவிக்கலாம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் தேசிய மருத்துவ ஆணையம் தனியார் கல்லூரியில் உள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வசூல் செய்யும் கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.

கட்டணம் நிர்ணயம்

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் கடிதத்துடன் தனியார் சுயநிதி கல்விக் கட்டண நிர்ணய குழு தலைவருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ள கடிதத்தில் சில விளக்கங்கள் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இந்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து மருத்துவக் கல்விக் கட்டண நிர்ணய குழு ஆய்வு செய்யும்.

மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் கடிதத்தில் மீதமுள்ள மாணவர்களுக்குக் கட்டணம் வசூலித்து அதற்கான பல்வேறு வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு தொடங்கிப் பாதி நடைபெறும் நிலையில் கடந்த 3ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எந்த ஆண்டு முதல் கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும் எனவும் அதில் தெளிவாகக் கூறவில்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி மாணவர்கள் 35 பேருக்கு சிறை

Last Updated : Feb 15, 2022, 2:58 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.