சென்னை துறைமுகம் முதல் புதுச்சேரி உப்பளம் துறைமுகம் வரையான சரக்குக் கப்பல் போக்குவரத்தை சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார்.
Glopal logistics எனும் நிறுவனத்தை சேர்ந்த Hope seven எனும் கப்பல் மூலம் ஒரு வாரத்தில் இருமுறை புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே சரக்குகள் ஏற்றிச் செல்லப்படும். இக்கப்பல் சென்னை - புதுச்சேரி இடையே 12 மணி நேரம் பயணிக்கும்.
இக்கப்பலில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக 106 கன்டெய்னர்கள் இடம்பெறும் எனவும்; அவற்றில் 86 கன்டெய்னர்கள் சாதாரண நிலையிலும் , 20 கன்டெய்னர்கள் குளிரூட்டப்பட்ட நிலையிலும் இருக்கும் என hope seven கப்பல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கன்டெய்னரில் 14 டன் முதல் அதிகபட்சம் 20 டன் வரை எடையுள்ள பொருட்களை ஏற்றிச்செல்ல முடியும்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால், 'தனியார் சரக்கு கப்பல் சேவை மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்குகளை கையாளும் திறன் 600 TEU அளவிற்கு அதிகரிக்கும் என சென்னை துறைமுகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்குக் கப்பல் மூலம் மாதத்திற்கு 4ஆயிரம் முதல் 5 ஆயிரம் TEU அளவுள்ள சரக்குகளை கையாள முடியும்.
சென்னை - புதுச்சேரி இடையே சாலை மூலமாக கன்டெய்னர்களை எடுத்துச்செல்லும்போது ஒரு கன்டெய்னருக்கு 30 ஆயிரம் வரை செலவாகும் என்றும், ஆனால் கப்பல் மூலம் எடுத்துச் செல்லும்போது 23 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றுமதியாளர்களுக்கு இத்திட்டம் நல்ல பலனைத்தரும்’ என்றார். மேலும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்; காற்று மாசுபாட்டை குறைக்கவும் இத்திட்டம் உதவும் எனவும் கூறப்படுகிறது.
சென்னை துறைமுகத்திலிருந்து புதுச்சேரிக்கு தனியார் கப்பலில் சரக்குகள் ஏற்றப்படுவதை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுனில் பாலிவால், 'இத்திட்டம் மூலம் புதுச்சேரி, கடலூர், திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதியைச் சார்ந்த தொழிலதிபர்களுக்கு பலன் கிடைக்கும். 2017-ம் ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மத்திய அரசின் சாகர்மாலா திட்டம் மூலம் 40 கோடியில் புதுச்சேரி துறைமுகம் 3.5 மீட்டருக்கு ஆழப்படுத்தப்பட்டது. சரக்குக் கப்பல் போக்குவரத்தால் மீன்களுக்கும் மீனவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' என்றும் தெரிவித்தார்.
மேலும் 5500 கோடி ரூபாய் மதிப்பிலான மதுரவாயல் - துறைமுகம் இடையிலான ஈரடுக்கு மேம்பாலப் பணிக்கான ஒப்பந்தம் மார்ச் 7ஆம் தேதி கோரப்படும் என்றும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பணிகள் தொடங்கும் என்றும் சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாம்பு கடித்து இறந்ததாக கருதப்பட்ட இளைஞர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த அதிசயம்
தொடங்கியது சென்னை - புதுச்சேரி இடையேயான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து - தொடங்கியது சென்னை புதுச்சேரி இடையே கப்பல்
சென்னை - புதுச்சேரி இடையேயான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கியது

TAGGED:
Port