ETV Bharat / state

பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: பிரதமர் வருகையின்போது ஒரு லட்சம் பேர் கூடுதவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Prime Minister visit: Traffic change in Chennai

author img

By

Published : Feb 12, 2021, 2:51 PM IST

சென்னைப் பெருநகர காவல் துறை மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு இணைந்து சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

50 திருநங்கைகள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதையடுத்து கூடுதல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சகோதரன் மற்றும் தோழி அமைப்புகளுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

Prime Minister visit: Traffic change in Chennai
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னையில் கரோனா காலங்களில் 38 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளது. வரும் 14ஆம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அவர் வருகையின்போது ஒரு லட்சம் பேர் வருவதாக தகவல் இருக்கிறது. இதனால் காமராஜர் சாலை, அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

எல்இடி சிக்னல்களை நகரில் வேறு எங்கெல்லாம் பொருத்த வேண்டும் என்பதற்கான ஆய்வு நடத்தப்படுகிறது. மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் கண்களுக்கு பாதிப்பாக இருந்தால் அவற்றின் தன்மை குறைக்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.