ETV Bharat / state

புதிய தொடக்க பள்ளிகளை உருவாக்க நடவடிக்கை - தொடக்க கல்வித்துறை

தமிழ்நாட்டில் தேவையின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தேவையின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயரும்

author img

By

Published : Feb 1, 2023, 10:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி இல்லாத ஊர்களில் புதிய தொடக்கப்பள்ளி உருவாக்கவும், ஏற்கனவே உள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் போதுமான இடங்களை தேர்வு செய்தும், வருவாய் துறையின் ஆவணங்களை இணைத்தும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளிகள் துவக்கப்பட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை தொடக்க கல்வித்துறை மேற்கொள்ளும். அதேபோல் நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்த வேண்டிய பள்ளியில் குறித்தும் புதிதாக தேவைப்படும் இடங்களில் தொடக்கப் பள்ளிகளை துவங்குவதற்கான முன் விண்ணப்பிக்க வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் , இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விதிகள் 2011ன் படி தேவையின் அடிப்படையில் புதிதாக தொடக்கப்பள்ளி தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் குறித்த விபரத்தையும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய விபரத்தையும் கூகுள் வரைபடத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

புவியியல் தகவல் உரிமை பயன்படுத்தி தாவியின் அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வள மையத்தைச் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்குவதற்கான இடம் சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் வசூல் வரைபட சான்று இணைக்கப்பட வேண்டும் புல வரைபடத்தில் பள்ளிக்கான இடம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். சிட்டா பட்டா போன்ற நிலம் சார்ந்த ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும் பள்ளி இடம் சார்ந்த விபரங்கள் முழுமையாக இணைக்கப்பட வேண்டும்.

நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய பள்ளிக்கு கட்டிட வசதி கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி கழிப்பறை வசதி குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விபரங்கள் அளிக்கப்பட வேண்டும். புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கும் போது போதிய மாணவர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். மேலும் புதிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியாக தரம் முயற்சி வழங்கிய தேவை இல்லை என்றாலும் அது குறித்த விவரத்தையும் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.