ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு! - supreme court news in tamil

5 additional judges to permanent judges in Madras HC: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நிரந்தர நீதிபதிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 10:56 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜீயம் முடிவெடுத்தது. இது குறித்து சமீபத்தில் இணையதளத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜீயம் வெளியிட்ட தீர்மானத்தில், கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்றக் கோரிய தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு ஆளுநரும் அவர்களது ஒப்புதலை தெரிவித்தனர்.

அதன்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், கொலிஜீயத்தின் தலைவருமான டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகளான எஸ்.கே.கவுல் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் ஐந்து நிரந்தர நீதிபதிகளான ஏ.ஏ.நக்கீரன், நிடுமோலு மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன் மற்றும் கபாலி குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டனர்.

ஐந்து கூடுதல் நீதிபதிகளின் தகுதியைக் கண்டறியும் நோக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து முன்னதாக தகவல் பெறப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டதாக கூடுதல் தகவலையும் அறிவித்திருந்தது, கொலிஜீயம். அதைத் தொடர்ந்து 2017 அக்டோபர் 26ஆம் தேதியிடப்பட்ட தீர்மானத்தின்படி, கொலீஜியத்தின் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளின் அமர்வில் நிரந்தர நீதிபதிகளின் பரிந்துரை கணக்கிடப்படுவதாகவும் தெரிவித்தது.

இது குறித்து கொலீஜியம் கூறியதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகளின் தகுதி மற்றும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்தும், பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கணக்கிடப்பட்டும் மேலும் அவர்களின் முழு அம்சங்களையும் தீர ஆராய்ந்த பின்னரே நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தைத் தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான ஆனந்த் ராமநாத் ஹெக்டே மற்றும் கண்ணன்குழில் ஸ்ரீதரன் ஹேமலேகா ஆகியோரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் சித்தய்யா ராசய்யா, தொடர்ந்து நவம்பர் 8ஆம் தேதி வரை கூடுதல் நீதிபதியாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் அனைத்தும் சட்ட ஆணையத்தால் தீர ஆய்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னரே உயர் நீதிமன்றங்களில் நிரந்திர நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் முதல் வாரம் வரை வெவ்வேறு நாட்களில் நீதிபதிகளாக பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர்.

கூடுதல் நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவி வகிதது வந்த ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமென உச்ச நிதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் பவரை பறித்த ஆட்சியர்.. தென்காசியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.