ETV Bharat / state

மறைந்த கேப்டனுக்கு சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை! - tamilnadu cm

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு பொது இடத்தில் மணி மண்டபம் அமைத்து, சிலை நிறுவ தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vijayakanth
மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு மணி மண்டபம், சிலை அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை - பிரேமலதா விஜயகாந்த்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 7:30 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் (டிச.28) உடல் நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின் அவரது உடல், தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (டிச.29) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (டிச.30) காலை விஜயகாந்த்தின் துணைவியாரும், தேமுதிகவின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அவரது இரு மகன்கள், குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவியும், பூஜை செய்தும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்த அனைத்து கட்சியினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தலை வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு விஜயகாந்த்துக்கு சிலையுடன் கூடிய ஒரு மணி மண்டபத்தை பொதுவான இடத்தில் வைக்கக் கோரிக்கை வைக்கின்றோம்.

கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 24 மணி நேரமும் பூஜைகள் செய்யப்படும். குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தலாம்.

அங்கு வருபவர்களுக்கு விஜயகாந்த் இருக்கும்போது எப்படி இருந்ததோ, அதே போல எப்போதும் உணவு வழங்கப்படும். உலகம் முழுவதும் அவரின் இறுதி அஞ்சலியைக் காண்பித்த ஊடகங்களுக்கு நன்றி. ஒட்டுமொத்த மக்களும் கேப்டனுக்கு செலுத்திய அஞ்சலிக்கு நன்றி" என தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை, அவர் நம்முடன் இருப்பார். இனிமேல் யார் வேண்டுமானாலும், கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தலாம். பொது இடத்தில் ஒரு மணி மண்டபம் கட்ட தமிழக அரசைக் கேட்டுள்ளோம். ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையினை ஏற்று, அரசு இதற்கு நிச்சயம் இடம் ஒதுக்குவார்கள் என நம்புகிறோம்.

இலங்கையில் ஒரு மாகாணத்தில் கடை அடைப்பு செய்து இருக்கிறார்கள். வணிகர் சங்கங்கள் மற்றும் திரைத்துறை படப்பிடிப்பு நிறுத்தி உள்ளார்கள். கேப்டன் விட்டுச் சென்ற பணிகள் ஏராளம் இருக்கிறது. அதை அவர் வழியில் அனைத்தையும் செய்வோம். தேமுதிக அனைவரும் ஒரே கரமாக இணைந்து செயல்படுவோம். கேப்டன், மிகப்பெரிய வரலாற்றைப் படைத்து விட்டுச் சென்று இருக்கிறார்.

கேப்டனின் லட்சியத்தை வென்று எடுப்பதே எங்களின் நோக்கம். கேப்டன் விஜயகாந்த்தின் புகழ் ஒரு சதவீதம் கூட குறையாமல், அதை விட பல மடங்கு கொண்டு சேர்ப்போம். இதுவரை தமிழகம் காணாத அளவுக்கு மக்கள் குவிந்து உள்ளார்கள். 15 லட்சம் மக்கள் வந்து கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். வெகு விரைவில் கேப்டன் விஜயகாந்த், எங்கள் வீட்டிலேயே பேரனாக வந்து பிறப்பார்" என கண்ணீர் மல்க கூறினார்.

இதையும் படிங்க: வெள்ள பாதிப்பு; ரூ.1,000 கோடி நிவாரண தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு.. எந்தெந்த இழப்புக்கு எவ்வளவு தொகை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.