பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மாநகராட்சியில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இங்கு மழைநீர் வடிகால் திட்டங்கள் 2016 முதல் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன.
சென்னையில் 2,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதற்கட்டமாக உலக வங்கி நிதி, மாநில அரசு நிதி, மாநகராட்சி நிதி மூலம் 1,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்துவிட்டன.
வட சென்னை பகுதியில் 2,500 கிலோ மீட்டர் தொலைவில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் முதற்கட்டத்தில் உள்ளன. மூன்று ஆண்டுகளில் இது நிறைவடையும்.
நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள நான்கு வடிகால் பிரிவுகளும் ஒன்றிணைக்கப்படும்.
தற்போது இடைக்காலத்தில் அனைத்து வார்டுகளிலும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களை உதவிப் பொறியாளர்கள் அடங்கிய குழு கண்டறிந்து தூர்வாரும் பணி ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது.
1960 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு நேற்று ஒரேநாளில் மூன்று மணி நேரத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இது போன்ற மிக அதிக அளவில் மழை பெய்ததால் நீர் வடிய நேரமாகியது. பல இடங்களில் கட்டட பணிகள் நடைபெறுவதாலும் நீர் வடிவத்தில் பிரச்னை ஏற்பட்டது.
நேற்று 57 இடங்களில் மழைநீர் தேங்கியது. எத்தனை இடங்களில் மழைநீர் தேங்கியது, எவ்வளவு நேரம் தேங்கியது எனக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்துவந்தோம்.
மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகள் இருந்த பகுதிகளில் நீர் தேங்கும் பிரச்னை இல்லை. மாநகரம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினை இருக்காது.
90 சதவீத இடங்களில் நீர் தேங்கும் பிரச்னை சரி செய்யப்பட்டது. மீதமுள்ள இடங்களில் விரைவில் சரி செய்யப்படும். பருவமழை காலத்தில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் நீர்வழிப் பாதைகளைத் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
சில குறிப்பிட்ட பகுதிகள் கடல் மட்டத்தைவிட உயரம் குறைவாக உள்ளதால் தண்ணீர் தேங்குகிறது. அடுத்து வரும் நாள்களில் கனமழை பெய்தாலும் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. கூவம் ஆற்றுப் படுகையில் 15 ஆயிரம் மக்கள் ஆக்கிரமித்து வந்த நிலையில் 13,500 நபர்களை உரிய இழப்பீடு வழங்கப்பட்டு, மரியாதையான வகையில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆறு மாதத்தில் கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். அடையாறில் 9,500 நபர்கள் ஆக்கிரமித்துவந்த நிலையில் அதில் 4,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பக்கிங்காம் கால்வாய் பகுதியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அவர்களை வேறு இடத்துக்கு மாற்ற சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு, பொதுப்பணித் துறையை இணைத்து பணியாற்றிவருகிறோம்.
சென்னையில் மத்திய அமைப்பு நடத்திய ஆய்வில் 50 விழுக்காடு மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிந்திருப்பது தெரியவந்துள்ளது. பண்டிகை காலத்தில் மக்கள் கவனத்துடன் கொண்டாட வேண்டும், வீட்டில் வயதானவர்கள், சக்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த 3,500 களப்பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 24 ஆயிரம் காலி மனைகள் உள்ளன. இங்கு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
காய்ச்சல் முகாம்கள் மூலமாக டெங்கு பாதிப்பு தடுக்கப்படுகிறது" என்றார்.
'சென்னையில் மழைநீர் வடிகால் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு' - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை: இனிவரும் நாள்களில் கனமழை பெய்தாலும் நீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.