இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020ஆம் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. புத்தாண்டில் வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக செல்லாமல், பாதுகாப்பான முறையில் மித வேகத்தில் பயணம் செய்யவேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நள்ளிரவு நேரங்களில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் ஆகியோர் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். குறிப்பாக, சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்பட மாமல்லபுரம், ஈஞ்சம்பாக்கம், தாம்பரம், பாடியநல்லூர், திருபெரும்புதூர் ஆகிய இடங்களிலுள்ள மருத்துவ மையங்களிலும் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.
இதற்காக 50 ஆம்புலன்சுகள், 15 இருசக்கர ஆம்புலன்சுகள் என மொத்தம் 65 ஆம்புலன்கள் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. முதலமைச்சர் ஆலோசனையின்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ரேஷன் அட்டையை மாற்ற உதவுங்கள்' - 'வாய்ஸ்' கொடுத்த அமைச்சர்!