ETV Bharat / state

‘திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் அதிகாரத்தை பறிப்பதே நாம் தமிழரின் லட்சியம்’ - சீமான் - திமுக அதிமுகவை ஒழித்தே தீருவோம்

சென்னை: திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் அதிகாரத்தை பறிப்பதே நாம் தமிழரின் லட்சியம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

nam tamilar seeman
nam tamilar seeman
author img

By

Published : Nov 26, 2019, 9:24 PM IST

சென்னையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 65ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கேக் வெட்டி கொண்டாடினார். இதனையடுத்து கட்சி நிர்வாகியின் குழந்தைக்கு மதிவதனி என பிரபாகரன் மனைவி பெயரை வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

வேலு பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘தொடர்ந்து பிரபாகரனை பயங்கரவாதி என கூறி வருகின்றனர். தமிழர்களை கொலை செய்த ராஜிவ் காந்தி சர்வதேச தீவிரவாதி என நான் கூறுவேன்.

இலங்கை தமிழர்களை அழித்த காங்கிரஸ் அதற்கு துணை போன திமுக நடைபெற்ற கொடுமைகளை வேடிக்கை பார்த்த அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் அதிகாரத்தை காலி செய்யவேண்டும் என உறுதி எடுத்துளோம்.

நிச்சயம் அதனை செய்து காட்டுவோம். தமிழ்நாடடில் 17 லட்சம் பேர் தமிழ் உணர்வுடன் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டு தேர்தலில் பல லட்சம் வாக்குகளாக உயரும். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் பிரபாகரன் தேசிய தலைவர் பயங்கரவாதி இல்லை என்பதை அனைத்து பகுதிகளிலும் பரப்புரை செய்வோம்" என்றார்.

Intro:திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி கட்சிகளின் அதிகாரத்தை பறிப்பதே நாம்தமிழரின் லட்சியம் என சீமான் சூளுரைBody:விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 65வது பிறந்தநாள் விழா நாம்தமிழர் கட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கேக் வெட்டி கொண்டாடினார்.கட்சி நிர்வாகி குழந்தைக்கு மதிவதனி என பிரபாகரன் மனைவி பெயரை வைத்து வாழ்த்து திரிவிதாரம்Conclusion:பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் தொடர்ந்து பிரபாகரனை பயங்கரவாதி என கூறிவருகின்றனர்.தமிழர்களை கொலைசெய்த ராஜிவ்காந்தி சர்வதேச தீவிரவாதி என நான் கூறுவேன் என பேசிய அவர் இலங்கை தமிழர்களை அழித்த காங்கிரஸ் அதற்கு துணைபோன திமுக நடைபெற்ற கொடுமைகளை வேடிக்கை பார்த்த அதிமுக பிஜேபி ஆகிய கட்சிகளின் அதிகாரத்தை காலி செய்வேண்டும் என உறுதி எடுத்துளோம் நிச்சயம் அதனை செய்து காட்டுவோம் என கூறிய அவர் தமிழகத்தில் 17 லட்சம்பேர் தமிழ் உணர்வுடன் எங்களுக்கு வாகளித்துள்ளார் இது இனி வரும் 2021 தேர்தலில் இன்னும் பல லட்சம் வாக்குகளாக மாறும் என கூறிய அவர் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் பிரபாகரன் தேசிய தலைவர் பயங்கரவாதி இல்லை என்பதை அனைத்து பகுதிகளிலும் பரப்புவோம் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.