ETV Bharat / state

சென்னையில் இதுவரை 47,572 சுவரொட்டிகள் அகற்றம்!

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில், இதுவரை 47,572 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jul 15, 2021, 7:58 AM IST

poster removal by chennai corporation  chennai corporation  poster removal  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சென்னை மாநகராட்சி  சென்னை மாநகராட்சியால் சுவரொட்டிகள் அகற்றல்  சென்னையில் சுவரொட்டிகள் அகற்றும் பணி  சுவரொட்டிகள் அகற்றும் பணி
சுவரொட்டிகள் அகற்றம்

சென்னை: சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்கள், சுவரொட்டிகளால் மாநகரின் அழகை சீர்க்குலைத்து வருகின்றன.

இதனால் கடந்த ஜூலை 8 ஆம் தேதி, சென்னை பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்தார்.

போஸ்டர் அகற்றம்

மேலும் மாநகராட்சியின் சார்பில் சுவரொட்டிகளை அகற்றும் வகையில், நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் ஐந்து சாலைகளைத் தேர்வுசெய்து, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் முழுவீச்சில் அகற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று (ஜூலை 14) ஒரே நாளில் 517 இடங்களில் மொத்தம் 2,591 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 841 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 590 சுவரொட்டிகளும், தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 1,160 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன.

அதேப்போல் இதுவரை வடசென்னையில் 8,994 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் 9,498 மற்றும் தென் சென்னை பகுதியில் 29,080 என மொத்தம் 47,572 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஏடிஎம்மில் கொள்ளையடித்த பணத்தில் ஐபோன் வாங்கிய கொள்ளையன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.