சென்னை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன் மீதான உத்தேச விடை குறிப்புகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடை குறிப்பின் மீது வாட்ஸ்அப் மூலம் வினைகளை ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது. அப்போது 29,141 விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
பகுதி பாடவாரியாக மட்டுமே பாட வல்லுனர்கள் அழைக்கப்பட்டு விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி மே மாதம் 10ஆம் தேதி முதல் ஜூன்15 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கு அந்த தேதிகளில் அனுப்பியவர்களின் விவரங்கள் ஆட்சேபனைகள் பாடவாரியாக பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்புகள் தயார் செய்யப்பட்டு, மதிப்பெண்கள் http://trb.tn.nic.in/pg2021/04072022/msg.htm வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் இறுதி விடைக்குறிப்புகள் http://trb.tn.nic.in/pg2021/04072022/msg.htm என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு