ETV Bharat / state

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. - வானிலை மையம் தகவல்!

author img

By

Published : Aug 16, 2023, 1:45 PM IST

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

possibility for moderate rain and temperature rising in some places meteorological department announced
வெப்பத்தின் தாக்கம்

சென்னை: தமிழகத்தின் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட். 16), நாளையும் (ஆகஸ்ட்.17) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆக.18 முதல் 22 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: இன்று (ஆகஸ்ட். 16), நாளையும் (ஆகஸ்ட்.17) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி (மதுரை) 6, பெரியபட்டி (மதுரை) 5, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), தென்பரநாடு (திருச்சி), MRC நகர் ARG (சென்னை), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 3, விரகனூர் (மதுரை), மாயனூர் (கரூர்), மதுரை வடக்கு, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை நகரம், சிறுகமணி KVK (திருச்சி) ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: நாளை (ஆகஸ்ட். 16) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்முறை.. நன்னெறி வகுப்புகள் வன்முறையை வேரறுக்குமா? - கல்வியாளர்கள் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.