ETV Bharat / state

Audio Leak: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பால் பாஜகவுக்கு ஆபத்தா? - அண்ணாமலையின் பேச்சும்... அதற்குக் கிடைத்த ரியாக்‌ஷனும்!

author img

By

Published : Apr 18, 2022, 8:08 PM IST

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பாஜகவுக்கு ஆபத்தானது என போலியாக சித்தரித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவ்வமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான ஆடியோவை பரப்பி தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்து வருவதாகவும்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (Popular Front of India) மாநிலச்செயலாளர் நாகூர் மீரான் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தாகூர் மீரான், 'பாஜக தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் மீது அவதூறு பரப்புரையை முன்னெடுத்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தடை செய்யப்படும் என பொய்யான செய்தியை நம்பி அண்ணாமலை தங்களது நிர்வாகிகள் இடையே பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டால் பாஜகவினர் தாக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார், அண்ணாமலை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினால், பாஜகவுக்கு ஆபத்து என போலியாக சித்தரித்து வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பாஜக உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு தன் காரை தானே கொளுத்திக் கொண்டும் பிறர் செய்துவிட்டனர் என்று போலியாக செய்திகள் பரப்பி வருகின்றனர். இதனால், ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் எனக் கூறுகின்றனர். இதனால் மதக் கலவரம் ஏற்படும் என்ற ஐயம் உள்ளது.

அண்ணாமலை பேச்சு

இதனால், அண்ணாமலையை கைது செய்து, அவர்கள் என்ன சதித் திட்டம் செய்துள்ளனர் என்பதை கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் காவல் துறையினர் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: படித்த மேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை இளையராஜா ஒப்பிடுவது நல்லது அல்ல - கார்த்திக் சிதம்பரம் எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.