ETV Bharat / state

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புது படம்! - new film

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்க உள்ள புதிய படத்துக்கான பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படம் ஆக்சன் திரைப்படமாகவும் புதிய கதை களத்தை கொண்டும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புது படம்!

author img

By

Published : Jul 16, 2023, 10:24 PM IST

சென்னை: நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் சினிமாவில் ’புரட்சி கலைஞர்’ என போற்றப்பட்டவர், நடிகர் விஜயகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரது மகன் சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புது படம்

டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், யு.அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ள ஆக்சன் திரைப்படத்திற்கான பூஜை இன்று நடந்தது. சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படமாக இது அமைய உள்ளது. இந்த பூஜை விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் "ரேக்ளா" படத்தின் இயக்குநர் யு.அன்பு இக்கதையை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க: Ravindra Mahajani: பிரபல மராத்தி நடிகர் ரவீந்திர மஹாஜனி இறந்த நிலையில் மீட்பு!

இப்படத்திற்கான திரைக்கதை வசனமானது “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவால் இயற்றப்பட உள்ளது. இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது கேரள மாநில காடுகளில் துவங்கியுள்ளது. அது மட்டுமின்றி ஒடிசா, தாய்லாந்து நாடுகளில் உள்ள காடுகளிலும் இப்படப்பிடிப்பானது நடத்தப்பட படக்குழு திட்டமிட்டுள்ளது.

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புது படம்!
காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புது படம்!

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில், மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பை ஆடி 18ஆம் தேதி அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Jailer Update: இங்க நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ்.. ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.