திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்குப் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை ஆறு மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மிகவும் பிரசத்தி பெற்ற இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் விழா காலத்தில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் இருக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் துணி அல்லது சணல் பை கொண்டு வந்தால் குலுக்கல் முறையில் அவர்களுக்குத் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, குலுக்கல் முறையில் தேர்வாகும் 84 பேருக்கு 2 கிராம் தங்கமும் 10 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கப்படும்.
இதையும் படிங்க:
"நிராகரிக்கப்பட்டது போதும்; நிலைமை மாறட்டும்" - திருநங்கைகள் ஆவண மையம்