ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மூவருக்கு பிணை மறுப்பு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் மூன்று பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
author img

By

Published : Sep 3, 2019, 11:23 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி, பலர் பாலியல் வன்புணர்வு செய்ததாக, குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஜூலை மாதம் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில், பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களில் அருண் உள்ளிட்ட மூன்று பேர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு பிணை வழங்கினால், அது விசாரணையை பாதிக்கும் எனவும், அவர்களது செயலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று பேரின் பிணை மனுக்களையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Intro:Body:பொள்ளாச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி, பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமி, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண் உள்பட 3 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமியை மிரட்டி பாலியல் கொடுமை செய்த இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் எனவும், இவர்களது செயலை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.