ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்- வைகோ

author img

By

Published : Jan 9, 2021, 6:06 AM IST

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்
குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொள்ளாச்சியில் மாணவர்கள், இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என பலரை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் கூட்டுப் பாலியல் வன்முறையில் சில கயவர்கள் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய இக்கொடிய பாலியல் வன்முறையை அரங்கேற்றியவர்கள் மீது 2018 டிசம்பர் மாதம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அதனை ஒளிப்பதிவு செய்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் கொந்தளித்ததை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்த பார் நாகராஜன் உள்ளிட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

2019 பிப்ரவரியில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதில் தொடர்புடையவர்கள் அதிமுகவிற்கு தொடர்புடைவர்கள் என்பதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் போராடியது. இதனால் 2019 ஏப்ரலில் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

தற்போது சிபிஐ அலுவலர்கள் இந்த வழக்கில் அருளானந்தம், பாபு, ஹேரேன்பால் ஆகிய மேலும் மூன்று நபர்களைக் கைது செய்திருக்கின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும், சட்டத்தின் சந்துபொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் பங்கேற்ற கூட்டரங்கில் வாக்குவாதம் செய்த ஒப்பந்ததாரர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.