தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்புக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட சொட்டு மருந்தால் சுமார் ஆறு லட்சத்து 98 ஆயிரத்து 347 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இவற்றில் 42 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மொத்தம் ஆயிரத்து 645 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆறாயிரத்து 522 ஊழியர்களும், மாநகராட்சி சார்பில் ஆயிரத்து 738 ஊழியர்களும் பணியாற்றியுள்ளனர் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்து: விடுபட்ட குழந்தைகளின் வீட்டிற்கே சென்று மருந்து வழங்க நடவடிக்கை