சென்னை, இன்று (மே16)காலை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே சாலையில் சென்ற அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் கீழே எச்சில் துப்பியுள்ளார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் தன்னை நோக்கி ஏன் எச்சில் துப்பினாய் எனக்கூறி அந்த நடத்துனரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் நடத்துனரின் முகம் கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது. காயம் அடைந்த நடத்துனரை பொதுமக்கள் மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் நடத்துனரை தாக்கிய சைதாப்பேட்டை காவலர் லூயிஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சைதாப்பேட்டை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: டிப் டாப் உடை அணிந்து சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி