ETV Bharat / state

’அவசரத்துல யூனிபார்ம் மறந்துட்டேன்’..; காவலரின் தர்பூசணி திருட்டு - தர்பூசணி

பூந்தமல்லியில் பணியில் இருப்பதை மறந்து காவல் சீருடையில் தர்பூசணியை திருட ஆர்வம் காட்டிய வைரல் காணொலியை கண்ட நெட்டிசன்கள், காவலரின் செயலை, நடிகர் வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

தர்பூசணி திருட்டில் ஈடுபட்ட காவலர்.
தர்பூசணி திருட்டில் ஈடுபட்ட காவலர்.
author img

By

Published : Jun 19, 2021, 3:05 PM IST

சென்னை : கரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜூன்.19) பூந்தமல்லி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தர்பூசணி பழம் ஏற்றி வந்த, லோடு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர், தான் பணியில் இருப்பதை மறந்து, சீருடையிலேயே தர்பூசணி பழம் நிரப்பிய வாகனத்தின் அருகில் சென்றார். மேலும் வாகனத்தின் உள்ளே கையை நீட்டி, இருப்பதிலேயே பெரிய தர்பூசணி பழத்தை எடுக்க முயற்சித்தார்.

தர்பூசணி திருட்டில் ஈடுபட்ட காவலர்.

இறுதியாக வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள சிறிய கம்பி வழியே, தனது இரண்டு கைகளை விட்டு தர்பூசணியை மேலே எடுக்க முயற்சித்தும் பலனில்லை. அதனால் தர்பூசணியை அங்கிருந்து பின்னோக்கி உருட்டி விட, அங்கு நின்ற மற்றொருவர் பழத்தை எடுத்து பவ்யமாக அவரிடம் கொடுத்தார். காவலரும், தர்பூசணியை பணம் கொடுத்து வாங்கியது போல் மிகவும் சந்தோஷமாக அங்கிருந்து எடுத்துச் சென்றார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாய், காவலரே தர்பூசணி திருட்டில் ஈடுபட்ட, இந்த காணொலிக் காட்சிசமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும், ’போக்கிரி’ திரைப்பட வடிவேலு பாணியில், சீருடையில் இருப்பதையே மறந்து திருட்டில் ஈடுபட்ட காவலரின் செயலை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பப்ஜி மதனின் கேலி... பதிலுக்கு காவல் துறை சொன்னது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.