காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, சிறப்பாக செயல்பட்டு, நேர்மையாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
பின்னர், அவர் பேசியதாவது "மக்களைக் காக்கும் காவல்துறையினரின் பணி மேலானது. காவலர்கள் உடல் நலனையும் மன திடத்தை மேலும் மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினரால்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விருது பெற்றுள்ளது. காவல்துறையினருக்கான மேலும் இரண்டு அங்காடிகள் கூடுதலாக திறக்கப்படவுள்ளன. நேர்மையாக பணிபுரிவோருக்கு நல்ல பலன் காத்திருக்கிறது" என்று கூறினார்.