சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபால். இவர் நேற்று காலை அதேப் பகுதியில் உள்ள ஜெயின் துறவியை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையில் அந்தப் பகுதியிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.