ETV Bharat / state

சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை!

author img

By

Published : Aug 12, 2019, 4:02 PM IST

சென்னை: நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்கள் துணையுடன் தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது.

RAILWAY STATION

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களை பயன்படுத்தி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை

அந்தவகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனைக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மோகன் பேசுகையில், ”ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தக் வேண்டும் என்ற உத்தரவின்பேரில் சென்னை எழும்பூர் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே துணை கண்காணிப்பாளர் ஹரிஷ் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளின் உடமைகள், ரயில்பாதை, பார்சல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களை மோப்ப நாய் உதவியுடன் தொடர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். ரயில் நிலையத்தில் உள்ள 80 கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஒவ்வொரு பயணியின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டுவருகிறது. எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் சுதந்திர தினத்தைக் கொண்டாட தேவையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சுமார் 50 பேர் எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளி ஈடுபட்டுள்ளனர். ரயில் நேரத்திற்கு வரும் பயணிகள் அரை மணி நேரம் முன்னதாக வந்தால் அவர்களது உடமைகளை சோதனை செய்து அனுப்ப ஏதுவாக இருக்கும்” என்றார்.

Intro:Body:*சென்னை - ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை*

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களை பயன்படுத்தி தீவிர சோதனை நடைபெற்றது.

இந்தியாவின் 73வது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களை பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறற சோதனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மோகன், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த கூறி வந்த உத்தரவின் பேரில் சென்னை எழும்பூர் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ரயில்வே துணை கண்காணிப்பாளர் ஹரிஷ் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடமைகள், ரயில்பாதை, பார்சல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களை மோப்ப நாய் உதவியுடன் தொடர் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், ரயில் நிலையத்தில் உள்ள 80 கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஒவ்வொரு பயணியின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட தேவையான பாதுகாப்பை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ராயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உட்பட 50 பேர் எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பயணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், ரயில் நேரத்திற்கு வரும் பயணிகள் அரை மணி நேரம் முன்னதாக வந்தால் அவர்களது உடமைகளை சோதனை செய்து அனுப்ப ஏதுவாக இருக்கும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

(பேட்டி - மோகன் - ஆய்வாளர் - ரயில்வே பாதுகாப்பு படை)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.