சென்னை சேலையூரில் கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் துறையினர் சார்பில் நடைபெற்றது. இதில் சேலையூர் உதவி ஆணையர் விஸ்வேஸ்வரய்யா, வணிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து வணிகர்களிடம் உதவி ஆணையர் தலைமையில் காவல் துறையினர் எடுத்துரைத்தனர்.
மேலும் விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் 25 ஆயிரத்தைக் கடந்த கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை!