கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மருத்துவர்கள், காவல் துறை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் ஓய்வின்றி உழைக்கின்றனர்.
அந்த வகையில், சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் அருண் காந்தி. இவர் நேற்று சாந்தோம் பகுதியில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மதியம் 3 மணி அளவில், திடீரென்று அருண் காந்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருகில் இருந்த சக காவலர்கள் உடனே அவரை அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். காவலர் அருண் காந்தியின் இந்தத் திடீர் மறைவு சக காவலர்கள் மத்தியில், கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் காய்கறிகளை பெறுவது எப்படி? -வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் பதில்!