சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், சர்ச் தெருவில் இலங்கையை சேர்ந்த 14 நபர்கள் தங்கி இருப்பதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 14 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து முறையாக பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணம் செய்து சென்னை வந்து சென்னையில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கொள்முதல் செய்து இலங்கை கொண்டு சென்று விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீசார் அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தன்னைக் கடித்த பாம்பை கடித்து கொன்ற சிறுவன்