ETV Bharat / state

கேரளாவைச் சேர்ந்தவர் தனியார் விடுதியில் தற்கொலை: போலீஸ் விசாரணை!

சென்னை: பூவிருந்தவல்லி அருகேவுள்ள தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த நபர் தனியார் விடுதியில் தற்கொலை

author img

By

Published : Jan 5, 2021, 1:56 PM IST

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாஜின்(40). இவர் வேலை விஷயமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை, பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்தார். நேற்று முன்தினம் (ஜன.03) அறைக்குள் சென்றவர் இன்று (ஜன.05) காலை வரை அறையிலிருந்து வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறை கதவை தட்டியுள்ளனர். இருந்தபோதிலும் கதவு திறக்கப்படாததால் நசரத்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, விஷம் குடித்து, வாயில் நுரை தள்ளியபடி நிர்வாணமாக சாஜின் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கடைசியாக சாஜின் அறைக்கு ஒரு பெண் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், இவர் நிர்வாணமாக படுக்கையில் இறந்துகிடப்பதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் விஷம் கொடுத்து கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: எனக்காக யாருமில்லை: குடும்பத்தினரை வெறுத்த இளம்பெண் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.