வடசென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் பிடித்தனர். அப்போது, அந்த திருட்டில் ஈடுபட்ட சிறுவனை பிடித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி விசாரித்தார். அதற்கு அந்த சிறுவன் தான் 8ஆம் வகுப்பு படிப்பதாகவும், தனது தந்தை மது பழகத்திற்கு அடிமையானவர் என்றும் கூறினார்.
மேலும், ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக செல்போன் தேவைப்படுவதால் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையறிந்த திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, தனது சொந்த பணத்தில் அந்த சிறுவனுக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். சிறுவனை நேரில் அழைத்து வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் செல்போனை வழங்கினார்.
உடன் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி உள்ளிட்ட சக காவல் துறையினர் இருந்தனர். செல்போன் தேவைக்காக தவறான வழியில் செல்லவிருந்த சிறுவனை அறிவுரை கூறி உதவி செய்த காவல் துறை ஆய்வாளருக்கு, பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படிங்க: மருந்தக உரிமையாளரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!