சென்னை: தலைநகர் சென்னையில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மாநில கல்லூரி மாணவரான குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 29) திடீரென திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பிரச்சினைக்குரிய மாணவர்களைக் கண்டறிந்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் என அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சென்னை காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
clashes between college students: இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்க சென்னை புறநகர் ரயில், ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனையடுத்து, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல், அரக்கோணம் - சென்ட்ரல், செங்கல்பட்டு சென்ட்ரல் ஆகிய மார்க்கத்தில் செல்லக்கூடிய புறநகர் ரயில்கள், ரயில் நிலையங்களில் ரயில்வே, ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக இன்று (டிசம்பர் 30) காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையில் ஆய்வாளர், 25 காவலர்கள் இணைந்து மின்சார ரயில்களில் செல்லக்கூடிய கல்லூரி மாணவர்களைக் கண்காணித்தும், அவர்களின் உடமைகளைச் சோதனையும் செய்தனர்.
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு ரயில்வே பாதுகாப்புப் படை, 25 ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருவதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கும்மியடிக்குது கரோனாவும் ஒமைக்ரானும்: இதுல சன்னி லியோனின் குத்தாட்டம் வேறயா?