சென்னை சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன். இவர் அடையாறு பகுதியில் கடந்த 14ஆம் தேதி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது இவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் அழகேசனின் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அழகேசன் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, செல்போன் பறிப்பில் ஈடுபட்டது கண்ணகி நகரை சேர்ந்த விக்கி மற்றும் ராஜ் என்பது தெரியவந்து.
இந்த நிலையில் இன்று (ஜூலை23) காவல் துறையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த விக்கி மற்றும் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்களிடமிருந்த நான்கு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் இதே போல் பல இடங்களில் செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வனிதா விஜயகுமார் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா தேவி கைது