ETV Bharat / state

நகை பணத்துடன் புதுமணப்பெண் மாயம் - இரண்டாவது கணவருடன் சேர்ந்து கைது - நகையுடன் தப்பிய புதுமணப்பெண் கைது

தாம்பரத்தில் நகை பணத்துடன் புதுமணப்பெண் மாயமான வழக்கில் 40 நாள்கள் கழித்து காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இரண்டாவது கணவருடன் சேர்ந்து நகையை விற்றது விசாரனையில் அம்பலமானது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 2, 2022, 10:45 PM IST

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50). இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் நடராஜன் (30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா (28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியிலுள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆகி ஒன்றரை மாதம் ஆன நிலையில் கணவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றுடன் அபிநயா மாயமாகி உள்ளார்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் நடராஜன் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 40 நாள்கள் தேடுதலுக்கு பிறகு பழையமகாபலிபுர சாலை விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்ணை தாம்பரம் காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அபிநயா (28) மதுரையைச் சேர்ந்தவர் என்பதும் இவர் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், 2013ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த செந்தில் குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் செந்தில் குமாரிடமிருந்து பிரிந்து கேளம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து நன்காவதாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் நடராஜுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது தெரியவந்தது.

நகையுடன் தப்பிய புதுமணப்பெண் கைது

ஆனால் அபிநயா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட செந்தில்குமார் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நடராஜ் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற 17 சவரன் தங்க நகைகளை இரண்டாவது கனவர் செந்தில்குமார் உடன் சேர்ந்து மதுரையில் உள்ள நகைக்கடையில் விற்று பணத்தை செலவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர், அபிநயாவைையும், மதுரையைச் சேர்ந்த செந்தில்குமாரையும் கைது செய்த காவல் துறையினர் இருவரையும் தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து வேறு எங்காவது மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து: 11 பேர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.