சென்னை ஈகா திரையரங்கம் சிக்னல் அருகே போக்குவரத்து காவலர்களுக்கான நடமாடும் மருத்துவ முகாமை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் 115 வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து போக்குவரத்து காவல் துறையினர் சுழற்சி முறையில் பணி செய்துவருகின்றனர். பணி செய்யக்கூடிய இடங்களுக்கே சென்று காவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனா நோயை முழுவதுமாக ஒழிக்க முடியும். போக்குவரத்து காவல் துறையினர் சோதனை மேற்கொள்வதை இடைஞ்சலாக மக்கள் பார்க்க வேண்டாம். இ-பதிவு குறித்து பொதுமக்களிடம் காவலர்கள் விசாரணை நடத்துவது அவர்களது கடமை, அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்தியாவசியத் தேவையில்லாமல் வருவோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: காவலருக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்!