சென்னை ஆழ்வார்பேட்டை சி.வி. ராமன் சாலையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (78). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். கடந்த 21ஆம் தேதி இவரது வீட்டிற்கு வந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் கேஸ் கம்பெனியில் ஊழியராகப் பணிபுரிவதாக கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
பண மோசடி
வீட்டிலுள்ள கேஸ் இணைப்பை சரிபார்க்க வேண்டும் எனக் கூறி பார்த்துள்ளார். அப்போதும், கேஸ் இணைப்பில் பிரச்சினை உள்ளதாகவும், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் இல்லையென்றால் கேஸ் வராது என தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏழாயிரத்து 300 ரூபாய் வழங்கவேண்டும், நாளை சர்வீஸ் செய்பவரை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய முத்துகிருஷ்ணன் உடனடியாக ஏழாயிரத்து 300 ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
நீண்ட நாள்களாகியும், சர்வீஸ் ஊழியர் வராததால் சந்தேகமடைந்த முத்துகிருஷ்ணன் கேஸ் கம்பெனியை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் தரப்பிலிருந்து ஊழியர்கள் யாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துகிருஷ்ணன் இது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி!