சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் முத்துசாமி. இவர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு இரும்பு பெட்டி ஒன்று வாங்கி, அதைக் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் வைத்துள்ளார். அதில் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் துணிகளை வைத்து பூட்டு போட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காவல் நிலையத்தில் சென்று பெட்டியை பார்த்தபோது பெட்டி காணாமல் போனதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல் நிலையத்தில் வைத்திருந்த பெட்டியை திருடிச் சென்றது யார் என்றும், காவலரின் பெட்டியை திருடி செல்வதால் என்ன நடக்கப் போகிறது என்றும் வருத்தத்துடன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது பெட்டியை திருடியவர்களை கண்டுபிடித்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று தலைமை காவலர் முத்துசாமி, பூக்கடை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதையும் படிங்க: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!